Last Updated : 05 Dec, 2020 09:57 AM

 

Published : 05 Dec 2020 09:57 AM
Last Updated : 05 Dec 2020 09:57 AM

விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணையின் உபரி நீர் திறப்பு

திண்டிவனம் அருகே வீடூர் அணையின் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் வீடூர் அணையின் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்தபோது திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணையின் 32 அடி கொள்ளளவில் 24 அடியாக நீர்மட்டம் இருந்தது.

கடந்த 2 நாட்களாக பெய்துவரும் வடகிழக்குப் பருவமழையினால் ஏரி, குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அந்த வகையில், விழுப்புரம் அருகே உள்ள வீடூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள தொண்டி ஆறு, வராக நதியிலிருந்து வீடூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி, தற்போது இன்று (டிச. 05) காலை 7 மணி நிலவரப்படி, விநாடிக்கு 1,771 கன அடி தண்ணீர் வருகிறது.

இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 32 அடியில், 31.600 அடி நிரம்பியதால், விநாடிக்கு 405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையில் நீர் இருப்பு 573.699 கன அடி தண்ணீர் உள்ளது.

இந்த அணையின் மூலம் தமிழகத்தில் 2,200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கரும் என 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x