யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: ரஜினி குறித்து செல்லூர் ராஜூ சூசகமாக விமர்சனம்

யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: ரஜினி குறித்து செல்லூர் ராஜூ சூசகமாக விமர்சனம்
Updated on
1 min read

யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டுவிழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘எந்த ஒரு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தாலும் அதை செயல்படுத்தாமல் விட்டதில்லை. அந்தளவுக்கு தமிழகத்தின் வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்.

முல்லைப்பெரியாறு திட்டம் சாதாரண திட்டம் இல்லை. அம்ரூத் திட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அம்ரூத் திட்டத்தில் 26 சதவீதம்தான் நிதி ஒதுக்கப்பட்டது. மீதிதொகையை தமிழக அரசும், மாநகராட்சியும் நிதி ஒதுக்கி வழங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் அடுத்த 50 ஆண்டிற்கு குடிநீர் பிரச்சனை வராது. கரோனா காலத்தில் கூட நேரடியாக மக்களை சந்தித்தவர் முதலமைச்சர். அவர் தன்னுடைய உயிரைப்பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்த தொற்று நோயை கட்டுப்படுத்தினார்.

உள்ளாட்சித்துறையில் 143 விருதுகளை பெற்று உள்ளோம். அந்த விருதுகளை வாங்குவதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ‘‘எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஒரு வாரத்தில் 30 நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஆரூடம் சொல்லி வந்தார். ஆனால், 5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக ஆட்சி நடக்கிறது.

ஏரி, குளங்களை குடிமரமாமத்து திட்டம் மூலம் தூர்வாரப்பட்டதால் தற்போது 40 ஆண்டிகளுக்கு பிறகு கூட அவை நிரம்ப ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு கிள்ளிக்கொடுக்காமல் முதலமைச்சர் அளிக்கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கட்டும். அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இந்த கட்சி எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட சமாணியர்களின் கட்சி. தொடர்ந்து வென்று காட்டும், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in