

முதல்வரின் வியூகத்தால் நிவர் புயல் கூட நில்லாமல் ஓடிவிட்டது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது:
மக்களின் நீண்ட நாள் தாகத்தை முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் முதலமைச்சர் கே.பழனிசாமி தீர்த்து வைத்துள்ளார். இனி ஆண்டாண்டு காலமாக மதுரையில் தண்ணீர் பற்றாக்குறைக்கு வாய்ப்பே இருக்காது.
அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பதிலும், தடையில்லா மின்சாரம் வழங்கிலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதிலும், குடிநீர் வழங்குவதிலும் பற்றாக்குறை இல்லாமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்கிறார்.
நீர்மேலாண்மையில் தலைசிறந்த மாநிலம் எது என்று மத்திய அரசு புள்ளிவிவரங்களோடு ஆய்வு செய்தபோது தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
நீர் மேலாண்மையில் மட்டுமில்லை சிறந்த நிர்வாகத்திலும் அதிமுக அரசு வலுமையோடு இருக்கிறது என்று அமித்ஷா சொன்னார்.
மக்களுக்கு நல்லது செய்து எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொற்பனமாக முதலமைச்சர் திகழ்கிறார். இயற்கை எதிர்த்து கையாளுவதில் கூட முதலமைச்சர் திறமையாக செயல்படுகிறார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பல்வேறு புயல்கள் உருவானபோதும் பொதுமக்களை தாயாக இருந்து முதலமைச்சர் காப்பாற்றியுள்ளார். கொட்டுகிற ஏரியில் குடையைப்பிடித்துக் கொண்டு சென்னை செம்பரபாக்கம் ஏரிக்குச் சென்று அதன் நிலவரத்தை பார்வையிட்டார்.
இவர் காணொலி காட்சி மூலம் அறிவுரை கூறுகிற தலைவர் இல்லை. களத்தில் நின்று மக்களை காப்பாற்றுகிற தலைவராக முதலமைச்சர் கே.பழனிசாமி செயல்படுகிறார்.
முதல்வரின் வியூகத்தால் நிவர் புயல் கூட நில்லாமல் ஓடிவிட்டது. அதைதொடர்ந்து இன்னொரு புயல் உருமானது. இயற்கை புயலாக இருந்தாலும் சரி, செயற்கை புயலாக இருந்தாலும் அவர் வகுக்கும் வியூகங்களால் அனைத்து புயல்களையும் தூள் தூளாக முறியடித்துவிடுகிறார்.
இன்னும் ஆயிரம் ஆயிரம் சாதனைகளை சாமாணியர்களின் எளிய முதல்வர் கே.பழனிசாமி செய்து காட்டுவார்.
மதுரைக்கு திட்டங்களை வாரிகொடுக்கும் அவருக்கு 10 சட்டமன்ற தொகுதிகளையும் வெற்றிப்பெற்றுக் கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் மதுரைக்கு வாரிக்கொடுத்த திட்டங்களால் இங்குள்ள 10 தொகுதிகளை வென்று காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.