Published : 04 Dec 2020 05:05 PM
Last Updated : 04 Dec 2020 05:05 PM

புரெவி புயலில் சுற்றுச்சுவர் இடிந்தது: தனுஷ்கோடி தேவாலயத்தைக் காக்கத் தவறிய மாவட்ட நிர்வாகம் 

தனுஷ்கோடியில் நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாயலத்தின் சுவர் புரெவி புயலினால் பெய்த கனமழையினால் இடிந்து விழுந்தது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேய ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1.3.1914-ல் திறக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்கள் காலத்தில் பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களைக் கொண்டு தனுஷ்கோடி தேவாலயம் கட்டப்பட்டது.

22.12.1964-ல் தனுஷ்கோடியை தாக்கியப் புயலில், ரயில் நிலையம், துறைமுகக் கட்டிடங்கள்,சுங்க நிலையம் உள்ளிட்ட அனைத்துக் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமானது.

ஆனால் தேவாலயம் மட்டும் சிறிய அளவில் இடிபாடுகளுடன் தப்பியது.

நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த தேவாலயத்தைக் காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்காண சுற்றுலாபயணிகள் தனுஷ்கோடி வந்துச் செல்கின்றனர்.

வரலாற்று சின்னமான இந்த தேவாலயத்தில் உள்ள பவளப்பாறைகளையும், சுண்ணாம்பு கற்களையும் சமூக விரோதிகள் சிலர் எடுத்து தங்களது கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இதனால் தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ள தேவாலயம்,கோவில்,மருத்துவமனை,பள்ளிக்கூடம்,இரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டடங்களை அதன் பழமை தன்மை மாறாமல் பராமாரித்து பாதுகாத்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவினை மாவட்ட ஆட்சித் தலைவராக நந்தக்குமார் இருந்தபோது மேற்கொண்டது.

ஆனால் அவருக்குப்பின் வந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில் புரெவி புயலின் முன்செச்சரிக்கை நடவடிக்கைகயாக தனுஷ்கோடியில் இருந்து மீனவர் மக்கள் (ஆண்கள்210,பெண்கள்120,குழந்தைகள்30) 360 பேரை பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் தீவில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்தனர்.

தொடர்ந்து புரெவிப் புயலினால் தனுஷ்கோடி பகுதியில் பெய்துவரும் பலத்த மழையில், புயலில் மிஞ்சிய தேவாலயத்தின் மேற்குபக்க சுவர் வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.மேலும் தனுஷ்கோடியிலிருந்து மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

அதே சமயம் தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் மீதம் உள்ள கட்டிடங்களை அதன் பழமை தன்மை மாறாமல் பராமாரித்து பாதுகாத்திடும் வகையில் நந்தக்குமார் ஆட்சித் தலைவராக இருந்தபோது கொண்டு ரூ.3கோடி மதிப்பில்திட்டவரைவினை அமல்படுத்தி தனுஷ்கோடியில் மிஞ்சியுள்ள கட்டிடங்களின் பகுதிகளைபாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனுஷ் கோடிமீனவமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x