

தொடர்மழை காரணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நேற்று இருவர் உயிரிழந்தனர்.
பண்ருட்டி ஒன்றியம் ஆ.நத்தம் கிராம காலனியில் வசிக்கும் முருகன் என்பவர் மகள் சஞ்சனா (10). இவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று (டிச.3) வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோன்று, பண்ருட்டி வட்டம் கீழிருப்பு மதுரா பெரியகாட்டுபாளையம் கிராமத்தில் வசித்து வந்த ரங்கநாதன் மனைவி தனமயில் (55). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று (டிச.4) அதிகாலை மழையின் காரணமாக, பக்கத்து வீட்டு ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் இவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தனமயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.