Published : 19 Oct 2015 10:16 AM
Last Updated : 19 Oct 2015 10:16 AM

சென்னையில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்

கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

கணினியில் தமிழ் எழுத்துருக் களை அழகாகவும், வெவ்வேறு வடிவிலும் உருவாக்குவதற்கான தேவையை உணரும் வகையிலும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கை ஒருங் கிணைத்த கணித்தமிழ்ச் சங்க தலைவர் சொ.ஆனந்தன் கூறும் போது, “கணினியில் ஆங்கில எழுத்துருக்கள் ஏராளமாக உள் ளன. தமிழில் அப்படியான அழகிய எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சிகளோ, அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியோ

இல்லை. ஆங்கிலத்துக்கு ஈடாக, தமிழிலும் எழுத் துருக்கள் வருவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்தில் முதல்முறையாக தமிழ் எழுத்துருக்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்திய மொழிகளிலேயே எழுத்துருவுக்கென்று தமிழில்தான் இப்படியான கருத்தரங்கம் முதல் முறையாக நடைபெறுகிறது” என்றார்.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் பேசும் போது, “20 ஆண்டுகளாக தமிழ்க் கணினி குறித்த பொதுவான பல மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதிலும், தமிழ் எழுத்துருக்கள் என்கிற தனி துறைக்கென்று ஒரு கருத்தரங்கம் நடைபெறுவது பாராட்டத்தக்க நல்ல முயற்சி” என்று கூறினார்.

இக்கருத்தரங்கில், தமிழ் எழுத்தமைதி, மேலை நாட்டு எழுத்துருவியல், இந்திய எழுத்துருவி யல் பட்டறிவின் பாடங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன. இந்த அமர்வுகளில் மலேசிய முரசு அஞ்சல் கணினி நிறுவனத்தின் தலைவர் முத்து நெடுமாறன், மும்பை ஐஐடியின் பேராசிரியர் ஜீ.வி.குமார், குவஹாட்டி ஐஐடியின் துணைப் பேராசிரியர் உதயகுமார், ஆமதாபாத் தேசிய வரைகலை கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆதர்ஷ ராஜன், ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ் தலைவர் எம்.எஸ்.தர், நியாதி நுட்பங்கள் நிறுவனர் க.பிரதீப், ஓவியர்கள் மணியம்செல்வன், நானா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

கணித்தமிழ் விருது

முன்னதாக, கருத்தரங்கின் முதல் நாளன்று தினமலர் நாளிதழின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணித்தமிழ் விருது’ வழங்கப்பட்டது.

தமிழில் 30 ஆண்டுகளுக்கு முன்பே அழகிய வடிவில் தமிழ் எழுத் துருக்களை உருவாக்கியவர் இரா.கிருஷ்ணமூர்த்தி. தமிழை விரைவாக கணினியில் உள்ளீடு செய்வதற்கான விசைப்பலகை முறையையும் அறிமுகம் செய்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ்-7 இயங்குதளத்தில் புதிதாக அறிமுகப்படுத் தியுள்ள ‘விஜயா’ என்ற தமிழ் எழுத்துரு இரா.கிருஷ்ணமூர்த்தி யின் கண்டுபிடிப்பாகும்.

இரா.கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணித்தமிழ் விருதை’ கான்பூர் ஐஐடி தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வழங்கி னார். கருத்தரங்கில், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் த.உதயசந்திரன், கணித்தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் ப.செல்லப்பன், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் முன்னாள் தலைவர் மணிமணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x