

ரஜினி தலைமையில் நேர்மையான ஆன்மிக அரசியலும், ஆட்சியும் ஏற்பட இறையருளை யாசிப்பதாக முன்னாள் எம்.பி.யும், மக்கள் முன்னேற்றக் காங்கிரஸின் நிறுவனத் தலைவருமான ப. கண்ணன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை நான் மனதார வரவேற்கிறேன். எப்போதும் நான் அவர் அரசியலில் பிரவேசித்து மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவன் என்பதைப் பல சமயங்களில் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறேன்; இப்போதும் அதே மனநிலையில் நான் அவரை வரவேற்று வாழ்த்துகிறேன்.
ஆண்டவன் அவருக்கு அருள் புரிந்து அவருக்கு நீண்ட ஆயுளை வரமாய்த் தந்து தமிழ் மக்களையும், இந்திய மக்கள் அனைவரையும் காத்து, நல்ல எதிர்காலம் உருவாக அவர் தம் தலைமையில் நேர்மையான, ஆன்மிக அரசியலும், ஆட்சியும் ஏற்பட எனது இதயபூர்வமாய் இறையருளை யாசிக்கிறேன்’’.
இவ்வாறு முன்னாள் எம்.பி. ப. கண்ணன் தெரிவித்துள்ளார்.