விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 10 லட்சம் மெட்ரிக் டன் உரம்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் 10 லட்சம் மெட்ரிக் டன் உரம்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு
Updated on
1 min read

விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 10 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரிய நேரத்தில் தடையின்றி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் கூட்டு றவு ஒன்றிய அரங்கில் நேற்று நடந்தது.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடந்த 2011 முதல் 45 லட்சத் திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரத்து 40 கோடியே 80 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.2 ஆயிரத்து 694 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 10 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவையான டிஏபி, யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் போதிய அளவு இருப்பு வைத்து உரிய நேரத்தில் தங்குதடையின்றி வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 100 அம்மா மருந்த கங்கள், 194 கூட்டுறவு மருந்தகங்களில் ரூ.260 கோடியே 39 லட்சம் மதிப்பில் மருந்து கள் விற்கப்பட்டுள்ளன. 58 பசுமை நுகர் வோர் கடைகள் மூலம் ஒரு கோடியே 8 லட்சம் கிலோ காய்கறிகள் ரூ.31 கோடியே 12 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in