கோவை - அவிநாசி சாலையில் ரூ.1,621 கோடியில் மேம்பாலம்: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருச்சி சாலை மேம்பாலப் பணிக்குப் பின்னர் நிறைவேற்ற மக்கள் எதிர்பார்ப்பு

கோவை - அவிநாசி சாலையில் ரூ.1,621 கோடியில் மேம்பாலம்: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருச்சி சாலை மேம்பாலப் பணிக்குப் பின்னர் நிறைவேற்ற மக்கள் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவிநாசி சாலை முக்கியமான தாகும். குறிப்பாக, காலை,மாலை நேரங்களில் இங்கு கடும் நெரிசல் நிலவும். உப்பிலிபாளையம் முதல் விமானநிலைய சந்திப்பு வரை 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இதனால் விமானநிலையம் மற்றும் அவிநாசி வழித்தடத்தில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படும் சூழல் உள்ளது.

இதையடுத்து, உப்பிலிபாளை யம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621 கோடி மதிப்பில் 10.10 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்நிலை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைக்கிறார்.

இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய உயர்நிலை மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக 17.25 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 305 தாங்கு தூண்கள் அமைக்கப்பட உள்ளன. 48 மாதங்களில் இப்பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப்காலேஜ், விமானநிலைய சந்திப்புப் பிரிவு பகுதிகளில் ஏறு, இறங்குதளங்கள் அமைக்கப்பட உள்ளன" என்றனர்.

சமூக ஆர்வலர் ராஜ்குமார் கூறும்போது, ‘‘ஆறுவழிச் சாலையான அவிநாசி சாலையில் மேம்பாலப் பணிகள் மும்முர மடைந்தால், இருவழிச் சாலையாக மாறும்.

ஏற்கெனவே திருச்சி சாலையில் மேம்பாலப் பணி நடைபெறுவதால், பல வாகனங்கள் அவிநாசி சாலைக்கு வந்து, சுற்றிச் செல்கின்றன. இந்நிலையில், அவிநாசி சாலையிலும் மேம்பாலப் பணி மேற்கொள்வதால், மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகரிக் கும். எனவே, திருச்சி சாலை மேம்பாலப் பணி மற்றும் எல் அண்டுடி பைபாஸ் சாலையை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டப் பணி முடிந்தவுடன், அவிநாசி சாலையில் மேம்பாலப் பணியை தீவிரப் படுத்துவது சரியாக இருக்கும்’’ என்றார்.

மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து)முத்தரசு கூறும்போது, ‘‘அவிநாசி சாலையில் உயர்நிலை மேம்பாலப் பணி தொடங்கினாலும், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு இங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படாது. திருச்சி சாலை மேம்பாலப் பணி மார்ச் இறுதிக்குள் முடியும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அவிநாசிசாலை பாலப் பணி மும்முரமடையும் போது, திருச்சி சாலையில்மேம்பாலப் பணி நிறைவடைந் திருக்கும்’’ என்றார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை கோவை உதவி கோட்டப் பொறியாளர் (பொறுப்பு) பிரபாகர் கூறும்போது,‘‘தற்போது திருச்சி சாலை மேம்பாலப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. அடுத்தஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணி முற்றிலும் முடிக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in