

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். அதிகாலையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கவுதம் கார்த்திக் நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், கவுதம் கார்த்திக்கை தாக்கி விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கவுதம் கார்த்திக் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.