ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

ஆசிரியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
Updated on
2 min read

ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சி களின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கள் கூறியிருப்பதாவது:

கருணாநிதி (திமுக தலைவர்):

15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் கள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். 24 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜேக்டோ அமைப்புடன் அரசு பேச்சு நடத்தவில்லை. வேலைநிறுத்தம் அறிவித்த பிறகாவது அழைத்துப் பேசியிருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் இரு நாள்களுக்கு முன்புதான் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தியுள்ளனர். அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. போராட்டம் அறிவித்தவுடன் ஆசிரி யர்களை அழைத்துப்பேசி பிரச் சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் முயற்சி செய்திருக்க வேண்டாமா?

எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் சுமுக மான சூழலை ஏற்படுத்த எந்தவித முயற்சியையும் மேற் கொள்ளாத அதிமுக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித் துக்கொள்கிறேன். இப்போ தாவது ஆசிரியர்களின் பிரதி நிதிகளை அழைத்துப்பேசி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):

ஜேக்டோ சார்பில் கடந்த 3 மாதங்களாக பல்வேறு போராட் டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தவில்லை. எனவே வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி யுள்ளனர். ஜேக்டோ அமைப் பினருடன் அரசு பேச்சு நடத்தி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வராவிட்டால் 40 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் சத்துணவு ஊழியர்கள் பெயரளவில் பள்ளிகளை திறந்து வைத்துள்ளனர்.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவர்களின் போராட்டத்தை பாமக ஆதரிக்கிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும். தமிழக அரசு உடனடியாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதி களை அழைத்துப்பேசி அவர் களின் வேலைநிறுத்தப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு பள்ளிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜேக்டோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஆசிரி யர்களை மிரட்டி பணிய வைக் கும் முயற்சியில் அரசு ஈடு பட்டுள்ளது.

இது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in