Published : 02 Dec 2020 03:14 PM
Last Updated : 02 Dec 2020 03:14 PM

அரசுப் பள்ளி மாணவிகள் மருத்துவப் படிப்பு பயில நிதியுதவி: ஸ்டாலின் வழங்கினார்

நிதியுதவி வழங்கும் மு.க.ஸ்டாலின்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மருத்துவப் படிப்புக்கான உதவிகளை வழங்கினார்.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (டிச.2) வெளியிட்ட தகவல்:

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைக்கச் செய்திட வலியுறுத்திப் போராட்டம் நடத்தியதன் விளைவாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் பட்டப்படிப்பு பயில இடம் கிடைத்தது.

இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினை, மருத்துவப் படிப்பில் முன்னுரிமை அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்த கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், பரிகம் ஊராட்சியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியின் மகள் ம.மதுமிதா ஐந்தாண்டு மருத்துவப் படிப்புக்கான செலவினைக் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தா.உதயசூரியன் எம்எல்ஏ ஏற்றுக்கொண்டார். அதற்கான காசோலையினை திமுக தலைவர் மாணவியிடம் வழங்கினார்.

மாணவிகளுடன் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்.

அத்துடன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏவின் ஏற்பாட்டில், மாதவரம் தொகுதிக்குட்பட்ட இந்துஜா, காவியா, கோபிநாத், உமாதேவி, காயத்ரி ஆகிய அரசுப் பள்ளி மாணவி, மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்கான உதவித்தொகையினை திமுக தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தா.உதயசூரியன் எம்எல்ஏ, சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x