

மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றும் 10 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 75. அதில் தற்போது தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியுடன் சேர்த்து மொத்தம் 53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்துவரும் கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப்,முரளிசங்கர் குப்புராஜூ, மஞ்சுளாராமராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி டி வளையபாளையம், கோவிந்தராஜூலு சந்திர சேகரன், ஏ.ஏ.நக்கீரன், வீராச்சாமிசிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்ரமணியன் ஆகிய 10 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் இந்த 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த 10 பேரில் முரளிசங்கர் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் கணவன் - மனைவி என்பது குறிப் பிடத்தக்கது.