

பெருங்களத்தூரில் பாமகவினர் வந்த வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ராமேசுவரத்தில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த ரயிலை மறித்தபாமகவினர், ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். அருகே கிடந்த இரும்பு துண்டுகளை தண்டவாளத்தின் குறுக்கே வீசினர். அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக கோஷம்எழுப்பினர். இந்த காட்சிகள் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகபரவி வருகின்றன. ‘ரயில் மீது கற்களைவீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பலரும் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.