

பெருநகர சென்னை மாநகராட்சியில் 3 மண்டலங்களில் ஆண்களுக்கான நவீன குடும்ப நலக் கருத்தடை சிறப்பு முகாம் நடக்கிறது. இதற்கான விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தினை ஆணையர் பிரகாஷ் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நலக் கருத்தடை சிறப்பு முகாம்கள் நவ.28 முதல் டிச.4 வரை கீழ்க்கண்ட 3 நகர்ப்புற சமுதாய மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
1. ராயபுரம் மண்டலம் நகர்ப்புற சமுதாய நல மையம், சஞ்சீவராயன் பேட்டை, சோலையப்பன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, கைப்பேசி எண்கள் - 9445190711/ 9445190712/ 9445190713/ 9445190714/ 9445190715.
2. திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மையம், திருவேங்கடசாமி தெரு, புளியந்தோப்பு, சென்னை-12. கைப்பேசி எண்கள் - 9445190716/ 9445190717/ 9445190718/ 9445190719/ 9445190720.
3. அடையாறு மண்டலம், அடையாறு நகர்ப்புற சமுதாய நல மையம், வெங்கட்ரத்னம் நகர், அடையாறு, சென்னை-20. கைப்பேசி எண்கள்- 9445190721/ 9445190722/ 9445190723/ 9445190724/ 9445190725.
நவீன கருத்தடை செய்துகொள்ளும் நபர்களுக்கு ரூ.1100/- மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200/-ஐ அரசு ஊக்கத்தொகையாக வழங்குகிறது.
இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களை ஆணையர் பிரகாஷ், இன்று (01.12.2020) ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.திவ்யதர்ஷினி, மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.