

மத்திய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவாசாயிகளைப் பாதிக்கும் சட்டங்களைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மறியில் போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி. ஆறுமுகம், கு.ரவீந்திரன், மாநில குழு உறுப்பினர் ஆர் மல்லிகா, ஒன்றிய செயலாளர்கள் தெய்வேந்திரன், பி.புவிராஜ், சாலமன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கியவாறு ஊர்வலமாக புறப்பட்டனர்.
அவர்களை மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆர்தர் அகஸ்டின், அங்காளஈஸ்வரி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியினர் போலீஸார் கடந்து சென்று இளையரசனேந்தல் விலக்கு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.