

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ரூ.13 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 8.87 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.
இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியிடம் மனு கொடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் வட்டாட்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் இடத்தை அளவீடு செய்தனர்.
இதில் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது.
இதையடுத்து அந்த நிலத்தை மீட்டு, மீண்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாதபடி அறிவிப்பு பலகை வைத்தனர்.
இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.13 கோடி இருக்கும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.