தொடர் கொலை சம்பவங்கள் எதிரொலி: சிறையிலுள்ள முக்கிய ரவுடிகளை வெளிமாநில சிறைக்கு மாற்றும் பணிகள் மும்முரம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் சிறையிலிருந்து வரும் உத்தரவுகளினால் தொடர் கொலைகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் அங்குள்ள முக்கிய ரவுடிகள் 5 பேரை வெளி மாநில சிறைகளுக்கு மாற்றும் பணிகள் மும்முரமாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக கொலைகள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிறையிலிருக்கும் முக்கிய ரவுடிகளே இதற்கு பின்புலமாக இருப்பது தெரிய வந்தது. அத்துடன் சிறையில் சர்வசாதாரணமாக கிடைக்கும் செல்போன்கள் மூலம் அங்கிருந்து வெளியிலுள்ள கூட்டாளிகளுக்கு தகவல் அனுப்பி இதை செய்வதும் கண்டறியப்பட்டது.

அடிக்கடி சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டாலும் தொடர்ந்து கிடைத்து வந்தன.

இதையடுத்து சிறையிலுள்ள முக்கிய ரவுடிகள் 5 பேரை புதுச்சேரியிலிருந்து வெளிமாநில சிறைகளுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறையிலுள்ள 5 ரவுடிகளை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளும் புதுச்சேரி அரசு விரைந்து எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக சிறைத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “5 முக்கிய ரவுடிகள் புதுச்சேரி யிலிருந்து வெளிமாநில சிறை களுக்கு மாற்றப்பட உள்ளனர். முக்கியமாக வடமாநில சிறை களுக்கு கூட மாற்றப்படலாம். முக்கிய 5 ரவுடிகளின் படங்கள் எடுக்கப்பட்டு அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் ரகசியமாக செய்யப்படும். உள்துறை அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in