பாலஸ்ரீ தேசிய விருதுக்கான போட்டிகள்: அக்.10,11 தேதிகளில் நடக்கிறது

பாலஸ்ரீ தேசிய விருதுக்கான போட்டிகள்: அக்.10,11 தேதிகளில் நடக்கிறது
Updated on
1 min read

10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் கலைத்திறமைக்கு வழங்கப்படும் பாலஸ்ரீ விருதுக்கான போட்டிகள் சென்னையில் அக்டோபர் 10,11 தேதிகளில் நடக்கிறது.

இதுகுறித்து கலைப் பண்பாட்டுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் உள்ள தேசிய பாலபவன் சார்பில் 10 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் பாலஸ்ரீ எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேடை, அறிவியல், படைப்பு மற்றும் எழுத்து ஆகிய பிரிவுகளில் 16 விதமான போட்டிகள் நடத்தப்பட்டு, விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பாலஸ்ரீ விருதுக்கான சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள், ராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் வரும் 10,11 தேதிகளில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1- ம் தேதியிலிருந்து, 2005 மார்ச் 31-ம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். தங்கள் பிறப்பு மற்றும் பள்ளியில் படிப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டிக்கான அனைத்து பொருட்களையும் பங்கேற்பவர்களே கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28192152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in