முக்கிய ஆறுகளில் நீர்வரத்து காரணமாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 72 ஏரிகள் நிரம்பின: காவேரிப்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 72 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. காவேரிப்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறைகட்டுப்பாட்டில் மொத்தம் 519 ஏரி கள் உள்ளன. ‘நிவர்’ புயல் தாக் கத்தால் பொன்னை, கவுன்டன்யா, பாலாறுகளில் ஏற்பட்ட வெள்ளத் தால் இந்த ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின் றன. இதில், ராணிப்பேட்டை மாவட் டத்தில் உள்ள 54 ஏரிகள், வேலூர் மாவட்டத்தில் 15, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பெரிய ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதில், ராணிப்பேட்டை மாவட் டத்தில் பொன்னை ஆற்றில் அதிகப் படியான நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் வரை 44 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி யிருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி மேலும் 10 ஏரிகள் முழுமையாக நிரம்பின.

பாலாறு அணைக்கட்டில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு கடந்த 4 நாட்களில் அரை டிஎம்சி-க்கும் அதிகமான தண்ணீர் நிரம்பியுள்ளது. 30.65 அடி உயரம் கொண்ட காவேரிப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 23.50 அடியாக இருந் தது. ஏரிக்கு இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் காவேரிப்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பும் என்றும் இந்த ஆண்டு வரும் நாட்களில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏரிகள் நிலவரம்

‘நிவர்’ புயலுக்கு பிறகு பெரியளவில் மழை இல்லாததால் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒரே ஒரு ஏரியில் 90 சதவீதம் அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. 50-ல் இருந்து 70 சதவீதம் வரை 6 ஏரிகளும், 50 சதவீதம் வரை 2 ஏரிகளும், 25 சதவீதம் அளவுக்கு 9 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது. 68 ஏரிகளில் முழுமையாக நீர்வரத்து இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஒரு ஏரியில் 80 சதவீதமும், ஒரு ஏரியில் 70 சதவீதமும், 7 ஏரிகளில் 50 சதவீதமும், 12 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. 25 ஏரிகளில் நீர்வரத்து முழுமையாக இல்லை.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 54 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 4 ஏரிகளில் 90 சதவீத மும், 23 ஏரிகளில் 80 சதவீதமும், 51 ஏரிகளில் 50 சதவீதமும், ஒரு ஏரியில் 70 சதவீதமும், 60 ஏரிகளில் 50-ல் இருந்து 25 சதவீதமும், 208 ஏரிகளில் 25 சதவீதமும் நீர்மட்டம் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in