Last Updated : 30 Nov, 2020 02:52 PM

 

Published : 30 Nov 2020 02:52 PM
Last Updated : 30 Nov 2020 02:52 PM

தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுகிறது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் 

பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரம்புக்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்பட்ட மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது,

இதனால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

பொது பணித்துறை மூலமாக நடத்தபடும் அரசின் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் வசதி செய்து உள்ளது. இதை
இடைதரகர்கள் அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவு செய்து அதிக விலைக்கு விற்கப்படுகிறார்கள்.

இதனால் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்ய முடிவதில்லை பல தடவை முயற்சி செய்தும் ஆன்லைன் புக்கிங் என்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது.

இடைத்தரகர்கள் மூலம் புக்கிங் செய்து விற்கப்படும் மணலின் விலை அதிகமாக உள்ளது எனவே பொதுமக்கள் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் இரண்டு இடங்களில் அரசு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது.

அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது தற்போது அது நடைமுறையில் தான் உள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது என்பது தெரியும் ஆனால் அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது, என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தற்போது மணலின் விலை 45 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது தங்கத்தின் விலை அளவு தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது.

பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை என்று கூறிய நீதிபதிகள் சாதாரண பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x