

இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் அமைப்பு சார்பில் காரைக்கால் வீரர் ராஜசேகரனுக்கு ஆணழகன் பட்டம் வழங்கப்பட்டது.
இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் சார்பில், 5-வது மிஸ்டர் மஸில்மேனியா மாநில ஆணழகன் போட்டி, கோவை ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது. 55 கிலோ முதல் 80 கிலோ எடைப்பிரிவு வரை நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் விவரம்:
55 கிலோ எடைப்பிரிவில் ராணிப்பேட்டை வீரர் ஜெ.வினோத்ராஜ் முதலிடமும், திருச்சி வீரர் ஏ.பிரபாகரன் இரண்டாமிடமும், சிவகங்கை வீரர் ஏ.மரியான் மூன்றாமிடமும் பெற்றனர்.
60 கிலோ எடைப்பிரிவில் ஈரோடு வீரர் பி.பாலமுருகன் முதலிடத்தையும், தருமபுரி வீரர் கே.சந்தோஷ் இரண்டாமிடத்தையும், ராணிப்பேட்டை வீரர் டி.கோகுல் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
65 கிலோ எடைப்பிரிவில் சென்னை வீரர் எஸ்.செந்தூர்ராஜ் முதலிடத்தையும், மதுரை வீரர் எம்.மாரீஸ்வரன் இரண்டாமிடத்தையும், திருச்சி வீரர் ஏ.ஸ்டாலின் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.
70 கிலோ எடைப்பிரிவில் சேலம் வீரர் என்.கிருஷ்ணன் முதலிடத்தையும், சென்னை வீரர் எம்.ஜீவன்ராஜ் இரண்டாமிடத்தையும், மயிலாடுதுறை வீரர் ஜி.முகேஷ் ஆகியோர் மூன்றாமிடத்தையும் சொந்தமாக்கினர்.
75 கிலோ எடைப்பிரிவில் சென்னை வீரர் ஆர்.கவித்திருமாறன் முதலிடமும், ஈரோடு வீரர் எஸ்.ரேணுகோபால் இரண்டாமிடமும், செங்கல்பட்டு வீரர் ஜி.சந்தோஷ்குமார் மூன்றாமிடமும் பெற்றனர்.
80 கிலோ எடைப்பிரிவில் காரைக்கால் வீரர் ஆர்.ராஜசேகரன் முதலிடத்தையும், மதுரை வீரர் டி.மணிகண்டன் இரண்டாமிடத்தையும், திருச்சி வீரர் எஸ்.விக்னேஷ் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
80 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடைப்பிரிவில் சேலம் வீரர் ஜெ.ரியாஸ்கான் முதலிடத்தையும், விருதுநகர் வீரர் கே.ரகுராமன் இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி வீரர் ஜெ.சஜித் மூன்றாமிடத்தையும் கைப்பற்றினர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று காரைக்கால் வீரர் ஆர்.ராஜசேகரன் ஆணழகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இத்தகவலை இந்தியன் ஃபிட்னஸ் ஃபெடரேஷன் நிறுவனர் மற்றும் பொதுச் செயலர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.