தமிழகம் முழுவதும் 12 இடங்களில் சிறிய படகுத் தளம்: கடலோர பாதுகாப்பு குழுமம் தகவல்
கல்பாக்கம் அணுமின் நிலையத் துக்கு கடல்வழி அச்சுறுத்தல் உள்ளதால், அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளை மேற் கொள்ள கோவளம், எண்ணூர் பகுதிகளில் சிறிய படகுதளங்கள் அமைக்கப்படுகிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் 12 இடங் களில் சிறிய படகு தளம் அமைக் கப்படுவதாக கடலோர பதுகாப்பு குழுமம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு கடல் மார்க்கமாக தீவிரவாத அச்சுறுத் தல் இருப்பதால் கடலில் கண் காணிப்புப் பணிகளை தீவிரப் படுத்த கல்பாக்கம் கடல் பகுதியில் ரோந்து படகுத் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய, கட லோரப் பாதுகாப்புப் படையின் தொழில்நுட்ப வல்லுநர் குழு கல்பாக்கம் பனையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதி களைப் பார்வையிட்டு படகுதளம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆனால், கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகள் பாறைகள் நிறைந்து காணப் படுவதால், படகுகளை நிறுத்து வதற்கான ஆழம் மற்றும் படகுத் தளம் அமைப்பதற்கான கட்ட மைப்பு வசதிகளை கடலில் ஏற் படுத்த முடியாத சூழ்நிலை உள்ள தாக தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்ததால், படகுத் தளம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடல் பகுதியில் படகு மூலம் ரோந்து பணி களை மேற்கொள்ள முடியாமல் கடலோர பாதுகாப்பு குழுமத் தினர் சிரமப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் கடல் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவதற் காக, அதிநவீன சிறிய படகுகளை கடற்கரையையொட்டி நிறுத்தி பயன்படுத்தும் வகையில், தமிழ கம் முழுவதும் 12 இடங்களில் சிறிய படகுத் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவளத்தை அடுத்த முட்டுகாடு பகுதியிலும் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் பகுதி யில் இந்த சிறிய படகுத் தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடலோர பாது காப்பு குழும காஞ்சிபுரம் மாவட்ட மண்டல கண்காணிப்பாளர் மனோ கரன் ’தி இந்து’விடம் கூறியதாவது:
கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்புக்காகவும், கடல் வழி அச்சுறுத்தல்களை தடுப்பதற்காக வும் கடலோர பாதுகாப்பு குழுமத் தினர், கடலில் ரோந்து பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது. ஆனால், கல்பாக்கம் பகுதியில் படகு தளம் இல்லாததால், சென்னையில் இருந்து படகுகளை இயக்கிவந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டியுள் ளது. அதனால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
ஆனால், படகு தளம் அமைக்க கூடிய அடிப்படை சூழல் இப்பகுதி கடலில் இல்லை. அதனால், அதிநவீன சிறிய படகு மூலம் ரோந்து பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 இடங்களில் தலா ரூ. 50 லட்சம் மதிப்பில் சிறிய படகுத் தளம் அமைக்கப்பட உள்ளன என்றார்.
