

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டியக்கத்தை வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியாக மாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 27, 28 தேதிகளில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து மாற்றுக் கொள்கையுடன் கூடிய ஒரு அணியை வளர்த்தெடுக்க வேண் டிய பெரும் அரசியல் கடமை இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கும், ஜனநாயக சக்தி களுக்கும் உள்ளது. இச்சூழலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டியக் கத்தை உருவாக்கியுள்ளன.
இந்த கூட்டியக்கத்தை 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் அணியாக வளர் த்தெடுக்க வேண்டும். இது போன்று மாற்றுக் கொள்கை களைக் கொண்ட கட்சி கள் மக்கள் நலக் கூட்டியக்கத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். மாற்றத்துக்காகப் போராடி வரும் மக்கள் நலக் கூட்டியக்கத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும்.
தமிழகத்தில் கனிம வளம், வன வளம், மணல் வளம் என அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப் படுகின்றன. நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சி, கூட்டுறவு என அனைத்து தேர்தல்களிலும் பணபலமும், சமூக விரோதிகளின் பலமும் ஆளுங்கட்சியின் வெற் றிக்கு காரணமாகிறது. பொரு ளாதார, பண்பாட்டுத் தளங்களை சீரழித்து விட்டன. எனவே, அதிமுக, திமுக அல்லாத ஒரு மாற்று அரசியலை உருவாக்க வேண்டும் என்ற மக்களின் கனவை நனவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, செயலாளர் டி.ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மாற்றத்துக்காகப் போராடி வரும் மக்கள் நலக் கூட்டியக்கத்துக்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும்.