

தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத் துறை, மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகளால், கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இந்நிலையில், சென்னை, கோவை,சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க மேலும் சிறப்புநடவடிக்கைகள் தேவைப்படுகின் றன. இதர மாவட்டங்களில் சோதனையின் அடிப்படையில் தொற்றுபாதித்தவர்கள் அளவு 2 சதவீதமாக உள்ளபோது, கிருஷ்ணகிரி மற்றும் சில மாவட்டங்களில் 3 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. எனவே, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
சமீபகாலமாக பொதுமக்க ளிடையே முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் அலட்சியம் காணப்படுகிறது. எனவே, பொதுஇடங்கள், பணிபுரியம் இடங்களில்சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றநடைமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து கண்டிப்பாக அபராதம் வசூலிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.