

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை தினத்தையொட்டி தமிழகத்தில் புகழ்பெற்ற ஈரோடு மஞ்சள் சந்தைக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெளிச்சந்தை, ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கம் ஆகிய 4 இடங்களில் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது.
ஆயுதபூஜையை ஒட்டி ஈரோடு மஞ்சள் சந்தைகளுக்கு இன்று, நாளை (வியாழன்) மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தை இயங்காது. மீண்டும் வரும் 26-ம் தேதி முதல் சந்தை வழக்கம்போல் இயங்கும் என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.