கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் தொடர்மழை பெய்தும் நிரம்பாத குளங்கள்

மதுரை கரிசல் குளம் பாண்டியன் நகரில் தெப்பம் போலத் தேங்கியுள்ள மழைநீர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை கரிசல் குளம் பாண்டியன் நகரில் தெப்பம் போலத் தேங்கியுள்ள மழைநீர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி நிர்வாகம், மழைநீர் கால்வாய்களை முறை யாக பராமரிக்காததால் தற்போது பெய்துவரும் மழையால் பிர தான சாலைகள், பல்வேறு குடியிருப்புகள் தண்ணீரில் மிதக் கின்றன.

சென்னையைப் போல பெரு மழையாக பெய்யாவிட்டாலும் மதுரையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நகர் பகுதி யில் தேங்கும் மழைநீரை வைகை ஆற்றுக்கும், குளங் களுக்கும் திருப்பிவிட முறை யான கால்வாய்களை மாநக ராட்சி அமைக்கவில்லை.

சில இடங்களில் கால்வாய்கள் இருப்பினும் அவற்றை முறை யாகப் பராமரிக்கவில்லை. அவற்றை ஆங்காங்கே தனியார் ஆக்கிரமித்துள்ளனர்.

பருவ மழைக்கு முன்னரே தண்ணீர் தேங்குவதைத் தடுக்க மாவட்ட நிர் வாகமும், மாநக ராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வில்லை. மாநகராட்சி ஜல்சக்தி திட் டத்தில் 14 குளங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து தூர்வாரினர்.

அந்தக் குளங்களில் தற்போது பெய்யும் மழை நீர் ஓரளவு தேங்கி வருகிறது.

ஆனால், நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம், முத்துப்பட்டி கண்மாய், டவுன் ஹால் ரோடு கூடலழகர் கோயில் தெப்பக்குளம், அழகர்கோவில் சாலையில் உள்ள கொடிக்குளம் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை. மாநகராட்சியில் தண்ணீர் தேங்கும் 40-க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டும், அங்கு தண் ணீர் தேங்காமல் இருக்க நடவ டிக்கை இல்லை.

மதுரைக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘ஜல்சக்தி’ உள்ளிட்ட திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் அது மழைநீரைச் சேமிக்கவும், வழிந்தோடவும் செய்வதற்கான திட்டங்களாக இல்லை.

சமீபத்தில் நீர் மேலாண் மையில் நாட்டிலேயே 2-வது மாநகராட்சியாக மதுரை மாநக ராட்சி விருது பெற்றது. ஆனால் சில வாரத்திலேயே மழை நீரில் நகரமே தத்தளிக்கிறது.

தற்போது நகர் பகுதியில் 2 நாட்களாகப் பெய்யும் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்புகள், சாலைகளில் தேங்கி நிற்கிறது.

மழைநீர் ஆக்கிரமிப்பின் பின் னணியில் பெரிய நிறு வனங்கள், அரசியல் பின்னணி உள்ளவர்கள் இருப்பதால் மாநகராட்சி நடவடிக் கை எடுக்கத் தயங்கி வரு கிறது.

வைகை ஆற்றின் இரு கரைகளிலும் முறையான திட் டமிடல் இன்றி கோடிக் கணக்கான ரூபாய்களை செலவழித்து தடுப்புச் சுவர்களை கட்டி உள்ளனர்.

இதனால் ஆற்றின் இருபுறமும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகள், குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி குளமாகி விட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in