ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் 14-ம் தேதி கடை அடைப்பு

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் 14-ம் தேதி கடை அடைப்பு
Updated on
1 min read

ஆன்லைனில் மருந்துகள் விற் பனை செய்வதை எதிர்த்து வரும் 14-ம் தேதி மருந்து வணிகர்கள் நாடு முழுவதும் ஒருநாள் கடைகளை மூடிவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மருந்து வணிகர்கள் சங்க தலைவர் டபிள்யு.எஸ்.மோகன்குமார், பொதுச்செயலாளர் டி.நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஆன்லைன் மூலம் மருந்து களை விற்பனை செய்யும் திட்டத்தை முறைப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. இது மருந்துகள், அழகியல் பொருட்கள் சட்டத்துக்கு எதிரான தாகும். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை பேச்சு வார்த்தையும் நடத்தியுள்ளோம். ஆனால், எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆன்லைன் விற்பனை செயல் பாட்டுக்கு வந்தால் தரம் குறைந்த மருந்துகள் விற்பனை அதிகரிக்கும். போலி மருந்துகள் அதிகரிக்கும். இதுதவிர, தடை செய்யப்பட்ட போதை மருந்து களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

மருந்து கிடங்குகள் மற்றும் கடைகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் பெறப் படும் மருந்துகள் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்று அறிய முடியாது. எனவே, பொதுமக்களின் நலனை காக்கவும், மருந்து விற் பனையாளர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டும் ஆன்லைன் மருந்து விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in