

மருந்து விற்பனை பிரதிநிதிகளை கொங்கு இளைஞர் பேரவையினர் ஆயுதங்களால் தாக்கிய சம்பவத்தை, காவல்துறையினர் வேடிக்கை பார்த்ததாகவும், முன் கூட்டியே தடுக்கத் தவறியதாக வும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
கோவை ராம்நகர், செங்குப்தா வீதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அலுவல கம் உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்து வதில் மருந்து விற்பனை பிரதிநிதி களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையினருக்கும் இடையே நேற்று முன்தினம் பிரச்சினை ஏற்பட்டது.
அலுவலகத்தை ஒட்டி நிறுத்தப் பட்டிருந்த மருந்து விற்பனை பிரதிநிதிகளின் இருசக்கர வாக னங்களை, கொங்கு இளைஞர் பேரவையினர் அடித்து நொறுக் கியதுடன், பயங்கர ஆயுதங்களு டன் அவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர். இதில், மருந்து விற்பனை பிரதிநிதிகள் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக, கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, மருந்து விற்பனை பிரதிநிதிகள் மீது கொங்கு இளைஞர் பேரவையினர் புகார் அளித்தனர்.
மருந்து விற்பனை பிரதிநிதி கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் காலை முதலே இரு தரப்பின ருக்குமிடையே வாகனங்கள் நிறுத்துவதில் பிரச்சினை இருந் துள்ளது. ஆனால், அருகே உள்ள காட்டூர் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஓரிரு போலீஸார் மட்டுமே சம்பவ இடத் தில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஒரு கும்பல் திடீரென தாக்குதலில் இறங்கிய தால் போலீஸாரால் உடனடியாக ஏதும் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட சம்பவம் முடிந்த பிறகே, அங்கு போலீஸார் குவிக் கப்பட்டனர். அதேசமயம், ஏற் கெனவே வாகனங்கள் நிறுத்து வது குறித்து பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், போலீஸார் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தாக்கு தலில் ஈடுபட்டவர்களை கட்சி அலுவலகத்துக்குள் அனுப்பி விட்டு, மருந்து விற்பனை பிரதி நிதிகளை போலீஸார் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சிசிடிவி கேமரா பதிவை வைத்து 13 பேரை பிடித்துச் சென்ற போலீஸார், அதில் 7 பேரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால், போலீஸார் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன.
ஆயுதங்கள் பதுக்கல்
கட்சி அலுவலகங்களில் ஆயு தங்களை பதுக்குவது, எப்போதும் தாக்குதலுக்கு தயாராக இருப்பது போல் கம்புகள், வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அரசி யல் கட்சியினர் வீதியில் வலம் வருவது உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்து கின்றனர்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தாக்குதலில் ஈடு பட்டவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுப்பதுடன் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.
கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, ‘7 பேர் கைது செய்யப்பட்டவுடன் இப்பிரச் சினை முடிவுக்கு வந்துள்ளது. பிரச்சினை குறித்த தகவல் கிடைத்தவுடன், போலீஸார் அனுப் பப்பட்டனர். அதனால்தான், விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.