Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவது இரக்கமில்லாத செயல்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் காலம் தாழ்த்துவது இரக்க மில்லாத செயல் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனை, எதிர்கட்சி துணைத் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மோர்தானா அணை யில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியபோது இடதுபுற கால் வாயை திறந்திருந்தால் பாக்கம், காங்குப்பம், தேவரிஷிகுப்பம் வழியாக லத்தேரி அருகே அன்னங் குடி ஏரிக்கு சென்றிருக்கும். வழியில் உள்ள கிராமங்களில் குடிநீர் ஆதாரம் கிடைத்திருக்கும். தற்போதுதான் காங்குப்பம் தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

வலதுபுற கால்வாயில் தண் ணீரை விட்டிருந்தால் வேலூருக்கு தண்ணீர் சென்றிருக்கும். ஏரிகளை முறையாக தூர் வாரினோம் என்று முதல்வர் கூறினார். ஆனால், வலதுபுற கால்வாயின் பல இடங்களில் தூர்ந்துபோயுள்ளது. இதை சீர் செய்யுமாறு ஏற்கெனவே திமுக சார் பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். மோர்தானா அணைக்கு செல்லும் சாலையும் மோசமாக உள்ளது. இதைப் பார்க்கும்போது மனது கஷ்ட மாக இருக்கிறது. குறைந்தபட்சம் இந்த சாலையை மட்டுமாவது பராமரித் திருக்கலாம். இந்த அணையை சுற்றியுள்ள பாதைகளாவது நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

தமிழக அரசு சிறப்பாக செயல் படுவதாகக்கூறி விருது கொடுத் திருப்பதாக சொல்கிறார்கள். முது நிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த் துவது கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத செயல் என்று கூறுவேன். பொதுப்பணித் துறை, நெடுஞ் சாலைத் துறை என்பது அதிகாரிகள் தூங்கினாலும் அமைச்சர் தூங்கக் கூடாது’’ என்றார்.

பின்னர், மோர்தானா அணை பகுதி பொதுமக்கள், திடீரென துரைமுருக னின் காரை முற்றுகையிட்டு மழை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சா ரம் இதுவரை வழங்கப்படவில்லை. எப்போது வரும் எனக் கேட்டனர். அவர்களை சமாதானம் செய்த துரைமுருகன், இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, அவரது வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x