புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 250 சிறப்பு மின்சார ரயில்கள் சென்னையில் மீண்டும் இயக்கம்

புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 250 சிறப்பு மின்சார ரயில்கள் சென்னையில் மீண்டும் இயக்கம்
Updated on
1 min read

‘நிவர்’ புயலால் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த அத்தியாவசிய பணியாளர்களுக்கான 250 சிறப்பு மின்சார ரயில்களும் நேற்று காலை முதல் இயக்கப்பட்டன.

அத்தியாவசிய பணிகளுக்குச்செல்லும் அரசு மற்றும் தனியார்நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்புரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய தொடர்புடைய அலுவலகம் அல்லது நிறுவனத்தின் அங்கீகார கடிதம் மற்றும் அலுவலக அடையாள அட்டையை காண்பிடித்துடிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அலுவலக நேரமல்லாத மற்ற நேரங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக மின்சார ரயில்கள் முழு அளவில்இயக்கப்படவில்லை. தற்போது, புயல் பாதிப்பு நீங்கியதால், நேற்று முன்தினம் மாலை முதல் சில மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. புயல் பாதிப்பு நீங்கி தற்போதுஇயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், 250-க்கும் மேற்பட்ட மின்சார சிறப்பு ரயில்கள் நேற்று காலை முதல் மீண்டும் இயக்கப்பட்டன’’என்றனர்.

பயணிகள் கோரிக்கை

இது தொடர்பாக பயணிகள் தரப்பில் கூறும்போது, ‘‘சென்னை புறநகரில் இருந்து தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே, தற்போது இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளையும் அனுமதிக்க ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in