

ஆர்.கே.நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐடிஐயில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஐடிஐயில் பிட்டர், எலெக்ட்ரீசியன், கம்மியர் மோட்டார் வாகனம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன், புதிய அரசு ஐடிஐயை இன்று (நேற்று) பார்வையிட்டு, மாணவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.
மேலும், புதுவண்ணாரப்பேட்டை, அருணாசல ஈஸ்வரன் தெரு, காமராஜ் சாலையில் புதிய ஐடிஐக்கான நிரந்தர கட்டிடங்கள் அமையும் இடத்தையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, முன்னாள் எம்எல்ஏ பி.வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.