Published : 26 Oct 2015 03:18 PM
Last Updated : 26 Oct 2015 03:18 PM

கலாம் விதைத்த எண்ணங்களை செயல்படுத்த வலியுறுத்தி பொறியாளர் சைக்கிள் பயணம்

மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விதைத்த எண்ணங்களை செயல்படுத்த வலியுறுத்தி பெங்களுரில் தொடங் கிய ஐ.டி. இளைஞரின் சைக்கிள் பயணம் ராமேசுவரத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.

பெங்களுரில் உள்ள ஐடிசி இன்போடெக் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது ஹாருன் பைசல் (24). இவர் பெங்களுரில் இருந்து ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் வரையிலும் 620 கிலோமீட்டர் தொலைவை சைக்கிளில் பய ணித்து கடந்து சனிக்கிழமை வந்தடைந்தார்.

18.10.2015-ம் தேதி பெங்களுரில் துவங்கி, ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம், கரூர், மதுரை, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், வழியாக ராமேசுவரம் பேக்கரும்பு கலாம் நினைவிடத்திற்கு சனிக்கிழமை பகல் 11 மணியளவில் வந்தடைந் தார்.

இது குறித்து முகம்மது ஹாருன் பைசல் கூறியதாவது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாணவர்கள் இளைஞர்களுக்கு விதைத்த லட்சிக்கனவுகளை செயல்படுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணத்தை தொடங்கி னேன். சைக்கிளில் செல்வது மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும், மாணவர்கள், இளைஞர்கள் சைக்கிள் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்துவதற்காகவும், மோட்டார் வாகனங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்தும் விழிப்புணர்வு நமது நாட்டில் மிகவும் குறைவு. ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளில் சைக்கிளில் செல்பவர்களுக்காக தனியான வழித்தடங்கள் உள்ளது. அது போல இந்தியாவிலும் சைக்கிளில் செல்ல சாலையில் தனி வழித்தடங்கள் அமைத்திட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x