Published : 27 Nov 2020 07:05 PM
Last Updated : 27 Nov 2020 07:05 PM

சென்னை, சிவகாசி, திண்டுக்கல்லில் வெவ்வேறு நாட்களில் புத்தகத் திருவிழாக்கள்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை, சிவகாசி, திண்டுக்கல்லில் வெவ்வேறு நாட்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

சென்னை

சென்னை, கே.கே.நகரில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா மினி மஹாலில் மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், கடந்த 22-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்தப் புத்தகத் திருவிழா, வரும் டிச. 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 5,000 தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்களை இங்கு பெறலாம். இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி உண்டு.

தொடர்புக்கு: 98843 55516/ 90421 89635

சிவகாசி

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் - சிவகாசி மற்றும் ஜேசிஐ - சிவகாசி இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு சிவகாசி புத்தகக் கண்காட்சி, வரும் 29-ம் தேதி தொடங்கி, டிச.08 வரை காலை 10.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சி, திருத்தங்கல் ரோட்டில் அமைந்துள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி உண்டு.

தொடர்புக்கு: 95661 14006/ 96776 39643

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் மதுரை மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தக விற்பனை, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள பழைய தேனா வங்கி பில்டிங்கில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இந்தப் புத்தகக் கண்காட்சி, டிச.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி உண்டு.

தொடர்புக்கு: 94432 62763

இந்த மூன்று புத்தகக் காட்சிகளிலும் 'இந்து தமிழ் திசை'யின் அனைத்து வெளியீடுகளும் 10% தள்ளுபடியில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x