Published : 26 Oct 2015 07:55 AM
Last Updated : 26 Oct 2015 07:55 AM

தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு?- உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளுக்கான கட்ட ணங்களை அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் தமிழ் நாடு ஆம்னி பேருந்து உரிமை யாளர் சங்கம், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற் றும் ஆபரேட்டர்கள் சங்கம் என 2 சங்கங்கள் உள்ளன. இதில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமை யாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோயம்பேட்டில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு கள் குறித்து சங்கத்தின் செயலாளர் ஏ.அன்பழகன் கூறியதாவது:

எங்கள் சங்க உறுப்பினர்களிடம் சுமார் ஆயிரம் ஆம்னி பேருந்துகள் உள்ளன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப் படுகின்றன. தீபாவளி பண்டிகை யின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவ தாக பலர் கூறுகின்றனர். ஆனால், எங்கள் சங்க உறுப்பினர்களின் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் வசூலிக்காமல் வழக்கமான கட்டணமே வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்படி சென்னையில் இருந்து எந்தெந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிக்கிறோம்.

திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாகப்பட்டினத்துக்கு சாதாரண பேருந்துகளில் ரூ.660, ஏசி பேருந் தில் ரூ.790 கட்டணம் வசூலிக்கப் படும். காரைக்குடி, ஈரோடு, புதுக்கோட்டை, திண்டுக்கல் - சாதாரண பேருந்தில் ரூ.700, ஏசி பேருந்தில் ரூ.750,

நாகர்கோவில், தென்காசி, திருச் செந்தூர், தூத்துக்குடி - சாதாரண பேருந்துகளில் ரூ.900, ஏசி பேருந்துகளில் ரூ.1,100. மதுரை, ராமநாதபுரம் - சாதாரண பேருந் துக்கு ரூ.750, ஏசி பேருந்தில் ரூ.800. கோவைக்கு சாதாரண பேருந்தில் ரூ.800, ஏசி பேருந்தில் ரூ.890.

சிவகாசி, கம்பம், தேனி, பொள் ளாச்சி, உடுமலைப்பேட்டைக்கு - சாதாரண பேருந்துகளில் ரூ.850, ஏசி பேருந்துகளில் ரூ.940 என்ற அளவில் மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x