Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

‘நிவர்’ புயலால் கொட்டிய கனமழை கவுன்டன்யா-பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்களில் ‘நிவர்’ புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் பாலாற்றின் துணை ஆறுகளான கவுன்டன்யா, பொன்னை ஆறு களில் வெள்ளப்பெருக்கு அதி கரித்தது. கரையோர கிராமங்க ளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.

‘நிவர்’ புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய, விடிய மழை பெய்தது. வேலூர் மாவட் டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மீட்புப் பணிகள் மேற்கொண்டனர்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை 8 மணிக்குப் பிறகு காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி யதுடன், நண்பகல் 12 மணி வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

மழை சேதம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி ‘நிவர்’ புயலால் 5 குடிசைகள், 15 மரங்கள், 4 மின் கம்பங்கள், 36 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாளி செடிகள் முற்றிலும் சேதமடைந்தது தெரிய வந்தது. சேத விவரங்களை வருவாய் மற்றும் வேளாண் துறை யினர் கணக்கெடுத்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 குடிசைகள், 8 ஓடு வீடுகள் சேத மடைந்ததுடன் இரண்டு பசு, இரண்டு கன்றுக்குட்டிகள் உயிரிழந் தன. புயலால் 42 மரங்கள் முறிந்து விழுந்தன. ஆற்காடு அருகேயுள்ள புங்கனூர் பகுதியில் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங் களும், திருவலம் அருகே அறு வடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களும் முழுமையாக சேதமடைந்ததன.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டத்தில் பாலாற் றின் துணை ஆறுகளான அகரம் ஆறு, பேயாறு, பொன்னை யாறு, கவுன்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளதால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேயாற்றில் இருந்து வெள்ள நீர் பள்ளி கொண்டா அருகேயுள்ள ஏரியில் வேகமாக நிரம்பி வருகிறது. மேல் அரசம்பட்டில் இருந்து வரும் அகரம் ஆற்று வெள்ள நீர் பாலாற் றுக்கு வந்தடைந்தது.

மோர்தானா அணை ஏற்கெ னவே முழு கொள்ளளவை எட்டியநிலையில் உபரிநீர் கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. ‘நிவர்’ புயுலால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி யில் மட்டும் நேற்று 15 செ.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று பகல் 2.30 மணி நிலவரப்படி கவுன்டன்யா ஆற்றில் 1,807 கனஅடி வீதம் வெள்ள நீர் வெளியேறியது.

பொன்னை அருகேயுள்ள தடுப் பணையும் ஏற்கெனவே முழுமை யாக நிரம்பிய நிலையில், ‘நிவர்’ புயலால் நீர்வரத்து அதிகரித்து நேற்று பிற்பகல் 1 மணியளவில் 3 ஆயிரம் கனஅடி வீதம் வெளி யேறியது.

அதேபோல், அமிர்தி வனப்பகுதியில் இருந்து உற்பத்தி யாகும் நாகநதி ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாகச் சென்று செய்யாற்றில் கலக்கும் நாகநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையும் அகரம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தம் ஆய்வு செய்தார். பொன்னை அணைக்கட்டு பகுதியை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.

ஏரிகள் நிலவரம்

ஒருங்கிணந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில், வேலூர் மாவட்டத்தில் 15, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9, திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x