Published : 27 Nov 2020 07:35 AM
Last Updated : 27 Nov 2020 07:35 AM

மீட்பு பணிகளில் ஈடுபட்ட மாநகராட்சி, காவல் துறைக்கு முதல்வர் பாராட்டு

தாம்பரம், கார்லே பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர் வழங்குகிறார் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால். உடன் தென் சென்னை இணை ஆணையர் ஏ.ஜி.பாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்.

சென்னை

நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் விரைவாக செயல்பட்டு பாதிப்புகளை சீரமைத்தனர். அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சியின் அம்மா உணவகங்களில் சுடச்சுட உணவு வழங்கப்படுவதை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, “நிவர் புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் பணியாளர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு பணிகள் மற்றும் ஆதரவால் நான் அதிக மாக மகிழ்கிறேன். இதுபோன்ற இயற்கை பேரிடர்களை வலு
வான திட்டங்கள் மற்றும் செயல்முறைகள் மூலம் எதிர்கொள்வோம்’’ என்று கூறியுள்ளார்.

காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ததை சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். இதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், ‘‘ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல் துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல் துறை நிர்வாகம் மற்றும் காவலர்களுக்கு எனது உளம்கனிந்த பாரட்டுகள்’’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த நவ.24-ம் தேதி எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரிடம் பதிலளிக்க எழுந்த அலுவலர்களை, அமர்ந்தே பதில் சொல்லுங்கள் என்று அவர் அறிவுறுத்தியது குறிப்
பிடத்தக்கது. தாம்பரம், கார்லே பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள், குடிநீர் வழங்குகிறார் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால். உடன் தென் சென்னை இணை ஆணையர் ஏ.ஜி.பாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x