

இலங்கை போர்க்குற்றத்துக்கு பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டி தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமி ழருவி மணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களுக்கு உள்நாட்டு அளவிலான விசார ணையே போதுமென்று இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். நேர்மையான விசாரணையை இலங்கை அரசால் ஒரு போதும் தர முடியாது. அந்நாட்டு நீதிமன்றங் களின் நம்பகத்தன்மையை பற்றி ஐநா மனித உரிமை ஆணை யத்தின் ஆணையர் உசேன் தனது அறிக்கையிலேயே கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று புலம்பெயர் தமிழர்கள் ஒருங்கிணைந்து சர்வதேச அளவிலான அழுத் தத்தை தருவது, மற்றொன்று தமிழக அரசியல் கட்சிகள் ஒருங்கி ணைந்து ஒன்றாக குரல் கொடுப் பது ஆகியன ஆகும். தமிழின பிரச்சினைகளில் முதல்வர் மேற் கொண்டு வரும் தெளிவான நடவடிக்கைகள் பாராட்டுக்கு ரியவை. இந்நிலையில் தமிழக அரசியல் தலைவர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று அங்கு பிரதமரை சந்தித்து, இலங்கை போர்க்குற்றத்துக்கு பன்னாட்டு விசாரணை தேவை என்பதை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.