

பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் உ.மா.செல்வராஜ் தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் தலைவர் கு.பாலசுப்ரமணியன் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.