சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின்: பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

மழை வெள்ளம் பாதித்த பகுதியைப் பார்வையிடும் ஸ்டாலின்.
மழை வெள்ளம் பாதித்த பகுதியைப் பார்வையிடும் ஸ்டாலின்.
Updated on
1 min read

சென்னையில் புயல், மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

நேற்று (நவ. 25) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று (நவ. 26) அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது.

இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள அடையாறு மற்றும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

நிவாரண உதவிகளை வழங்கும் ஸ்டாலின்.
நிவாரண உதவிகளை வழங்கும் ஸ்டாலின்.

மேலும், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள, சென்னை - சைதாப்பேட்டை பகுதி பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in