Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

‘நிவர்’ புயலின் கோர தாண்டவத்தால் தலைநகர் சென்னை இருளில் மூழ்கியது; கடலோர மாவட்டங்களில் சூறாவளியுடன் அதிகனமழை: வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி, கடலூர் நகரங்கள்- மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது

வங்கக் கடலில் உருவான அதி தீவிர ‘நிவர்' புயல் கடலூர், விழுப் புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச் சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங் களை புரட்டிப் போட்டுள்ளது. அப் பகுதிகளில் அதிகனமழை கொட் டித் தீர்த்து வருவதால் சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட நக ரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வங்கக் கடலில் உருவான ‘நிவர்' புயல் கடந்த 2 நாட்களாக தமிழக கரையை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்று வேகமாக கரையை நோக்கி நகர்ந்தது. இப்புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள் ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மாலை 5 மணி அளவில் புய லின் வெளிச்சுற்று கடலூர் கடற் கரையை தொட்டது. அப்போது புதுச்சேரியில் இருந்து புயலின் மையப்பகுதி சுமார் 150 கிமீ தொலைவில் இருந்தது அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் முதல் காரைக்கால் வரையிலான கடலோர மாவட்டங்களில் சூறாவளிக் காற் றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டன. மீனவர்களின் குடி யிருப்புகள் நாசமாயின. கிராமப்பு றங்களில் குடிசை வீடுகளை பலத்த காற்று சூறையாடியது. நகர்ப்புறங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலோர மாவட்டங்களில் குறிப் பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட் டங்களில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பின. உபரிநீர் வெளியேற்றப் பட்டதால் கால்வாய் கரையோரம் வசிக்கும் குடும்பங்கள் நிவாரண மையங்களில் தங்கவைக்கப் பட்டன.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக இருந்த நிலையில், நேற்று பிற்பகல் 12 மணி அள வில் 22 அடியை எட்டியபோது விநா டிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் 7 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. அந்த நீர் செங்கல்பட்டு மாவட்டம் மனப்பாக்கத்தை வந்தடைவதற் குள், அந்த இடத்தில் பல்வேறு ஏரிகளில் இருந்து உபரியாக அடை யாறில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு மேலும் அதிகரித்தது..

அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையாற் றின் கரையோரம் வசிக்கும் மக் களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை மேற்கொண்டு வரும் கண்காணிப்பு பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வரும் கடலோர மாவட் டங்களின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு இன்று விடு முறை விடப்பட்டுள்ளது. பிற மாவட் டங்களில் விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

மிதக்கும் சென்னை

சென்னையில் பெசன்ட் நகர், தியாகராய நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, புரசைவாக்கம், சூளை, வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், வேளச் சேரி, பாரிமுனை உள்ளிட்ட பகுதி கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. காமராஜர் சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் நெடுஞ்சாலை உள் ளிட்ட சாலைகளில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன. நேற்று மாலை காற்றும் மழையும் அதிகரித்த நிலையில், மேற்கூறிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்ட நிலையில், அப்பகுதி யில் வசிக்கும் பொதுமக்கள், கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத் தின்போது பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், சிலர் உறவினர் வீடுகளுக்குச் சென்றனர். பலர் தங்கள் உடைமைகளை முதல் மாடிகளுக்கு கொண்டு சென்றனர். கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள மேம்பாலங்களில் பாது காப்பாக நிறுத்தினர்.

மாநகராட்சி பகுதிகளில் தாழ் வான இடங்களில் வசிப்போர், மழைநீர் புகுந்த வீடுகளில் வசிப் போர் என, மாலை 6 மணி நில வரப்படி 25 நிவாரண மையங் களில் 1217 பேர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளை உணவு, மத்திய சமை யல் கூடங்கள் மூலமாகவும் அம்மா உணவகங்கள் மூலமாகவும் வழங் கப்பட்டு வருகிறது. சாலையோரம் வசித்த வீடற்றவர்கள் 216 பேர் மீட்கப்பட்டு, மாநகராட்சி இரவுக் காப்பகங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் 58 இடங்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சிப் பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட ராட்சத இயந்திரங்களைக் கொண்டு வெளியேற்றி வருகின்ற னர். அவர்களுக்கு மாநகர போலீ ஸாரும் உதவி வருகின்றனர். 52 இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்கள், முறிந்து விழுந்த மரக் கிளைகளை மாநகராட்சி பணி யாளர்கள், போலீஸார், தீயணைப்பு துறையினர் இணைந்து அகற்றி வருகின்றனர்.

மோசமான வானிலை காரண மாக சென்னை விமான நிலையம் நேற்று மாலை 7 மணிக்கு மூடப்பட்டது. அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. மெட்ரோ ரயில் சேவையும் நேற்று மாலை நிறுத்தப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் சே.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "புயல் கரையைக் கடப்பதால், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும் (20 செமீக்கு மேல்), ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத் தூர், தருமபுரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகளைச் சேர்ந்த 54 அணிகள்: மத்திய அரசு அனுப்பி வைப்பு

நிவர் புயல் கரையைக் கடந்ததும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை வழங்க இந்தியக் கடலோர காவல்படையின் 4 ரோந்துக் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், சென்னையில் 2 ஹெலிகாப்டர்களும், புயல் கடந்த பின் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 3 டார்னியர் விமானங்கள் விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

புயலின்போது கடல் பகுதியில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் மற்றும் வணிக கப்பல்களுக்கு உதவ கடலோரக் காவல்படையின் 4 ரோந்துக் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இதைத் தவிர, மாநில அரசுக்கு உதவ 100 வீரர்கள் சென்னையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தென்பிராந்திய ராணுவம் சார்பில் பெங்களூரில் இருந்து 8 குழுக்களும், கோவையில் இருந்து 2 குழுக்களும், சென்னையில் இருந்து 12 குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக தயார் நிலையில் உள்ளன. இக்குழுக்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் திருச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் துறை பத்திரிகை அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கடலோர காவல் படையின் 7 அணிகள், இந்திய தரைப்படையின் 14 அணிகள், வான்படையின் தலா ஒரு ஹெலிகாப்டருடன் 8 அணிகள், கடற்படையின் 10 அணிகள், தேசிய பேரிடர் மீட்பு படையின் 15 அணிகள் என மொத்தம் 54 அணிகள் மத்திய அரசு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x