

சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையாளராக டி.கே.ராஜேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்த எஸ்.ஜார்ஜ், சிறைத் துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார். அவ ருக்கு பதில், தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் சென்னை மாநகர காவல் ஆணை யாளராக நியமிக்கப்பட்டுள் ளார். மேலும், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதியை தமிழக சட்டம் -ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்தும் தமிழக அரசு நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டது.
சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் நேற்று காலை 11.05 மணிக்கு வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஜார்ஜ் ஒப்படைத்தார். கோப்பில் கையெழுத்திட்டு பணியை தொடங்கிய டி.கே.ராஜேந்திரன், பின்னர் ஜார்ஜை வழி அனுப்பி வைத்தார்.
பொறுப்பேற்றபின் நிருபர் களிடம் டி.கே.ராஜேந்திரன் கூறும் போது, ‘‘சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளர் என்பது மிகவும் பொறுப்பான மற்றும் சவாலான பதவி. இந்தப் பொறுப் புக்கு என்னை நியமித்த முதல் வருக்கு நன்றி. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல் படுவேன். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை’’ என்றார்.
பேட்டியின்போது கூடுதல் ஆணையாளர்கள் தாமரைக் கண்ணன், ஆபாஷ் குமார், ரவிக்குமார், நல்லசிவம், திருஞானம், நுண்ணறிவு பிரிவு இணை ஆணையாளர் வரதராஜு, துணை ஆணையாளர் ராமர் உட்பட பல அதிகாரிகள் உடனி ருந்தனர்.
101-வது ஆணையாளர்
முன்னதாக காவல் ஆணை யாளர் அலுவலகத்துக்கு வந்த டி.கே.ராஜேந்திரனுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப் பட்டது. இவர் சென்னை மாநகரத்தின் 101 வது காவல் ஆணையாளர் ஆவார்.
இதேபோல சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் பட்ட ஜே.கே.திரிபாதியும் நேற்று காலை டிஜிபி அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார்.