

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 9.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், ராணுவ ஹெலிகாப்டரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
திருப்பதியில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் மாலை 5.32 மணிக்கு சென்னை திரும்பினார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால், டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். மாலை 5.45 மணிக்கு தனி விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சமீபத்தில் குடியரசுத் தலைவர்,பிரதமரின் பயணத்துக்காக வாங்கப்பட்ட புதிய சிறப்பு விமானத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பயணமாக சென்னை வந்ததாக கூறப்படுகிறது.