

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ரஜினிகாந்த் நிச்சயம் இம்முறை கட்சி தொடங்கவேண்டும் என்று ரசிகர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த மாதஇறுதியில் ரஜினிகாந்த் வெளியிட்டட்விட்டர் பதிவில், "என் அறிக்கையைபோல ஒரு கடிதம் சமூகவலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவி வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதுகுறித்து தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன்" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினியை அரசியலுக்கு வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அதன் ஒருபகுதியாக, பல்லடம் நகரில் நேற்று ‘ஓட்டுன்னு போட்டா தலைவர் ரஜினிக்குத்தான், வா தலைவா வா’ என்றும், போருக்கு புறப்படுவோம் வா தலைவா வா’ என்றும், ரஜினியின் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.