சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புகழேந்தி
புகழேந்தி
Updated on
1 min read

சிறுமி பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியை பணியிடை நீக்கம் செய்து சென்னைமாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுஉள்ளார்.

சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயதுசிறுமி, தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் வண்ணாரப்பேட்டைஅனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷனிவிசாரணை நடத்தினார். விசாரணையில், 13 வயது சிறுமியை அவரது தாயாரே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ மற்றும் 5 (1) (ஏ) உள்ளிட்டசட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பேரில் சிறுமியின் தாய் ஷாகிதா பானு, மதன்குமார், செல்வி, சந்தியா, மகேஷ்வரி,வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 8 பேரை கடந்த 12-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தாய் ஷாகிதா பானு, மதன்குமார்,சந்தியா, மகேஷ்வரி என்கிற மகா,வனிதா, விஜயா ஆகியோரை கடந்த 16-ம் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் காவலில் எடுத்துவிசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த தகவலின்படி வண்ணாரப்பேட்டை, எம்சி.சாலையைச் சேர்ந்த தொழிலதிபரும், பா.ஜ.க பிரமுகருமானராஜேந்திரன் (44) என்பவரும், அவரின் நண்பரும், சென்னை எண்ணுார் காவல் நிலைய ஆய்வாளராக இருக்கும் புகழேந்தியும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், தரகர்களாக செயல்பட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக் முஸ்தபா ஆகியோரையும் மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது காவல் ஆய்வாளர் புகழேந்தி குறித்த தகவலைத் தெரிவித்தார். மேலும், புழேந்திக்கு எதிரான ஆதாரங்களும் கிடைத்தன. அதன் அடிப்படையில்தான் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆய்வாளர் புகழேந்தி இதுவரை பணியாற்றிய இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வாளருக்கும், பா.ஜ.க பிரமுகருக்கும் இடையேயுள்ள நட்பு குறித்ததகவல்களும் சேகரிக்கப்பட்டுஉள்ளன.

ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சிறுமி பாலியல் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in