Published : 23 Oct 2015 08:36 AM
Last Updated : 23 Oct 2015 08:36 AM

பவுன் விலை ரூ.152 குறைந்தது

சர்வதேச அளவிலான விலை மாற்றம் காரணமாக, சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.152 குறைந்தது. ஒரு பவுன் ரூ.20,280-க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக உள்ளது. சர்வதேச அளவில் தங்கம் விலை சற்று குறைந்ததால், உள்ளூரிலும் விலை குறைந்திருந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,554, ஒரு பவுன் ரூ.20,432-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.19 என பவுனுக்கு ரூ.152 குறைந்தது. இதையடுத்து, ஒரு கிராம் ரூ.2,535-க்கும், ஒரு பவுன் ரூ.20,280-க்கும் விற்பனையானது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x