Published : 01 Oct 2015 09:36 AM
Last Updated : 01 Oct 2015 09:36 AM

தமிழக என்எஸ்எஸ் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.9 கோடி நிதி வழங்கியது: கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட நிதி மீண்டும் ஒதுக்கீடு

தமிழகத்துக்கு கடந்த ஆண்டு என்எஸ்எஸ் நிதி ஒதுக்கீடு நிறுத் தப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு இந்த ஆண்டு ரூ.9.35 கோடி வழங்கியுள்ளது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளில் முடங்கிப் போயிருந்த என்எஸ்எஸ் பணிகள் உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இளம் பருவத்தில் நாட்டுப்பற்றை யும், சேவை மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கில் என்எஸ்எஸ் எனப்படும் தேசிய நாட்டுநலப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் என்எஸ்எஸ் தொண்டர்களாக இருக்கிறார்கள்.

என்எஸ்எஸ் திட்டத்தைப் பொருத்தவரையில், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையும், மாநில அரசும் 7:5 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. தமிழகத் துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.9 கோடி அளவுக்கு நிதி வழங்கி வருகிறது. தமிழக அரசு தனது பங்களிப்பாக ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

இந்நிலையில் கடந்த 2014-2015-ம் ஆண்டில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு திடீரென நிறுத்தியது. என்எஸ்எஸ் நிதி பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பான பயன்பாட்டு சான் றிதழ் திருப்தியாக இல்லாத காரணத்தினால் நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக தமிழக அரசு தன் பங்குக்கு ஒதுக்கிய ரூ.4.37 கோடியையும் மாநில என்எஸ்எஸ். அலுவலகத்தால் பயன்படுத்த முடியாமல் போனது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் என்எஸ்எஸ் செயல்பாடுகள் கடந்த ஆண்டு முடங்கின.

இந்நிலையில் மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி, கடந்த 2011 முதல் 2014 வரையிலான கால கட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத்தியது தொடர் பான அறிக்கையை மாநில என்எஸ்எஸ் அலுவலகம் அனுப்பி வைத்தது. சந்தேகம் தொடர்பாக விளக்கம் கேட்டு கோப்புகள் திருப்பி அனுப்பப்படுவதும், தமிழக அதிகாரிகள் தேவையான விவரங் களுடன் மீண்டும் கோப்புகளை அனுப்புவதும் என கடந்த 9 மாதங் களாக நடந்துவந்தது. இந்நிலை யில், என்எஸ்எஸ் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.9.35 கோடி வழங்கியிருக்கிறது.

இதுகுறித்து என்எஸ்எஸ் மாநில தொடர்பு அலுவலர் பேராசிரியர் எஸ்.ராஜேசேகரன் கூறியதாவது:-

2015-16-ம் நிதி ஆண்டுக்கு தமிழக என்எஸ்எஸ் திட்டத்துக்காக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ரூ.9 கோடியே 35 லட்சம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் நிதியும் விரைவில் கிடைத்துவிடும். இதற் கான பணிகள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. நிதி கிடைக்கப் பெற்றவுடன் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அக்டோபர் இறுதிக்குள் என்எஸ்எஸ் பயன் பாட்டு நிதி வழங்கப்படும். பல் கலைக்கழகங்களிடமிருந்து சம்பந் தப்பட்ட கல்லூரிகளுக்கு நவம்பர் முதல் வாரத்தில் நிதி சென் றடைந்துவிடும். எனவே, விரைவில் என்எஸ்எஸ் செயல்பாடுகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x