

நில அளவை பதிவுத்துறையில் காலியாக உள்ள கணினி பதிவு அலுவலர் பணிக்கு இம்மாதம் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள நில அளவை பதிவேடுகள் துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் விரைவு பட்டா திட்டத்திற்கு காலியாக உள்ள 9 கணினி பதிவு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தற்காலிக அடிப்படையிலான இப்பணிக்கு ரூ.7 ஆயிரத்து 500 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு பயிற்சியுடன் கணினி பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பங்களை உதவி இயக்குனர், நில அளவை பதிவுத்துறை, சிங்காரவேலர் மாளிகை 7 வது தளம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை:-1 என்ற முகவரிக்கு இம்மாதம் 27-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.