சிவகங்கை மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: கழிவு நீர் தொட்டியில் பணத்தை வீசிய ஊழியர்

சிவகங்கை மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் கழிவு நீர் தொட்டியில் பணத்தை தேடிய லஞ்ச ஒழிப்பு போலீஸார்
சிவகங்கை மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் கழிவு நீர் தொட்டியில் பணத்தை தேடிய லஞ்ச ஒழிப்பு போலீஸார்
Updated on
1 min read

சிவகங்கை மருத்துவ இணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று சோதனை செய்தனர். அப்போது கழிவு நீர் தொட்டியில் ஊழியர் ஒருவர் பணத்தை வீசியதாகக் கூறப்படுகிறது.

சிவகங்கை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இணை இயக்குநராக இளங்கோ மகேஸ்வரன் உள்ளார். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடமாறுதல் உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், குமாரவேலு தலைமையிலான போலீஸார் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஊழியர் ஒருவர் தன்னிடம் இருந்த பணத்தை அருகே உள்ள கழிவு நீர் தொட்டியில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கழிவு நீர்த் தொட்டி மூடியை திறந்து தேடினர்.

ஆனால் பணம் சிக்கவில்லை. மேலும் அலுவலகத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையையும் போலீஸார் கைப்பற்றினர். ஊழி யர்களிடம் இரவு வரை விசாரணை நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in