இந்து மக்களின் வாக்குகளை பெறவே மடாதிபதியை சந்திக்கிறார் உதயநிதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

இந்து மக்களின் வாக்குகளை பெறவே மடாதிபதியை சந்திக்கிறார் உதயநிதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
Updated on
1 min read

இந்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மடாதிபதியை உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரிப்படுகையை பாது காக் கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவிப்பதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே டெல்டாவில் நடைமுறைப்படுத்தப்படும். வேளாண் மண் டல அறிவிப்புக்கு பிறகு புதிதாக வேளாண் துறை சாராத எந்த திட்டங்களும் நடைமுறைப் படுத்தப்படாது. ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் பற்றி எனக்கு தெரியாது.

கோயில், பள்ளிவாசல், சர்ச் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களுக்கு அதிமுகவினர் உண்மை யான பக்தியுடன் செல்கின்றனர். ஆனால், திமுகவினரோ தேர்தலுக்காக ஆன்மிக தலங்களுக்கு செல்கின்றனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று திருநீறு பூசிக்கொள்கிறார். இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுவதையே தொழிலாகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த அவர், இந்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக மடாதிபதியை சந்திக்கிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவை தோற்கடித்து 3-வது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

பலவீனமாக இருப்பதால்தான்...

முன்னதாக, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேற்று வந்து அனைத்து சன்னதிகளிலும் வழிபாடு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக பலவீனமாக இருப்பதால்தான் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய புறப்பட்டுள்ளார். திமுகவில் உள்ள வேறு தலைவர்கள் மீது மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் தன் மகனை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in